| ADDED : நவ 17, 2025 02:51 AM
புதுச்சேரி: புதுச்சேரி, தந்தை பெரியார் நகர் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையேயான ஓவிய போட்டி நடந்தது. இதில், 'என் உலகம் என் வழி' 'என்னை நான் இருப்பது போலவே ஏற்றுக்கொள்' 'தயவு செய்து என்னை புரிந்து கொள்ளுங்கள்' ஆகிய தலைப்புகளில் ஓவிய போட்டி நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். மத்திய அரசின் ஓய்வு பெற்ற எஸ்.ஐ.எஸ்.ஐ., துணை இயக்குனர் சுப்ரமணியம், ஜிப்மர் பேராசிரியர் லதா சதுர் விதுளா ஆகியோர் ஓவிய போட்டியை துவக்கி வைத்தனர். பள்ளியின் தாளாளர் முனைவர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கினார். 1 முதல் 3ம் வகுப்பு வரையிலும், 4 முதல் 5ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலும், 9 முதல் பிளஸ் 2 வரையிலும் நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. அதில், கேந்திர வித்யாலயா பள்ளி திவ்யவர்ஷினி, கிறிஸ்டு இண்டர்நேஷனல் பள்ளி தான்யஸ்ரீ, பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாயலா பள்ளி சில்வியா, பெத்தி செமினார் பள்ளி பவின் ஆகியோர் முதல் பரிசு பெற்று பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.