உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதகடிப்பட்டு ஏரியில்  பனைமரங்கள் எரிந்து நாசம் 

மதகடிப்பட்டு ஏரியில்  பனைமரங்கள் எரிந்து நாசம் 

திருபுவனை: மதகடிப்பட்டு ஏரியில் மர்ம நபர்கள் தீ வைத்ததில், 30க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசமாகின. மதகடிப்பட்டு ஏரி 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியில் 100 ஆண்டுகள் பழமையான பனை மரங்கள், வேப்ப மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் இயற்கை அரணாக அமைந்துள்ளன. இந்நிலையில் ஏரிக்கரை பகுதி குடி பிரியர்களுக்கு திறந்தவெளி பாராக விளங்கி வருகிறது. அவர்கள் போதை தலைக்கேறியதும், பாட்டில்களை உடைத்து வீசுவதும், குப்பைகளை தீ வைத்து எரிப்பதும் வழக்கம். இந்நிலையில் மதகடிப்பட்டு ஏரியில் அடர்ந்த பனை மரங்களுக்கு அடியில் கிடந்த காய்ந்த பனை ஓலைகள், சருகுகள் உள்ளிட்டவைகளுக்கு நேற்று மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் ஏரிக்கரையின் கீழ் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட பனைமரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. எனவே, புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள் மதகடிப்பட்டு ஏரியில் தீயில் கருகிய பனை மரங்களை ஆய்வு செய்து, தீவைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ