மேலும் செய்திகள்
பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்
11-Apr-2025
பாகூர்; மதிகிருஷ்ணாபுரம் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவிலில், பங்குனி உத்திர காவடி உற்சவம் நேற்று நடந்தது.பாகூர் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வேம்படி வேல்முருகன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 43ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி உற்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான காவடி உற்சவம் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு தீர்த்த குளக்கரையில் இருந்து காவடிகள் அலங்கரிக்கப்பட்டது.திரளான பக்தர்கள் காவடி சுமந்து, அலகு குத்தி, செடலணிந்து, கார், வேன் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தனர். பெண்கள் பால் குடங்களை சுமந்து சென்று நேர்த்தி கடன் செலுத்தினர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற காவடி, செடல் ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி விதியுலா நடந்தது. இன்று (12ம் தேதி) இடும்பன் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
11-Apr-2025