உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய் வழியில் ஜாதி சான்றிதழ் பெற்றோர் மாணவர் நலச்சங்கம் வலியுறுத்தல்

தாய் வழியில் ஜாதி சான்றிதழ் பெற்றோர் மாணவர் நலச்சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி : தாய் வழியில் ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்து அரசாணை வெளியிடவேண்டும் என சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்கத்தின் தலைவர் நாராயணசாமி கவர்னர், முதல்வர், கல்வி அமைச்சர், தலைமை செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனு:தாய்வழியில் ஜாதி சான்றிதழ் உண்டா, இல்லையா என புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடாமல் உள்ளது. கோர்ட்டிற்கு சென்று தாய்வழி ஜாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என, உத்தரவு பெற்ற, பெறாத பெற்றோர்கள் தாசில்தாரிடம் சான்றிதழ் கேட்டு கருத்து மோதல்கள் ஏற்படுகிறது.எனவே, சிறப்பு சட்டசபையை கூட்டி கொள்கை முடிவை எடுத்து தாழ்வழி ஜாதி சான்றிதழ் உண்டா இல்லையா என அறிவிக்க வேண்டும்.அப்போதுதான் தகுதியான ஏழை மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகளில் சேர்ந்து படிக்கமுடியும். மாநிலத்தில் பிறந்து, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, எந்த மாநிலத்திலும் அரசு இட ஒதுகீட்டில் விண்ணபிக்காத மாணவர்களுக்கு மட்டுமே ஜிப்மர் உட்பட அரசு ஒதுக்கீட்டில் உள்ள 451 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அளிக்கப்படும் என, கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கவேண்டும். 10 சதவீதம் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் இலவச கல்வி என, அறிவித்து அரசாணை வெளியிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி