உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பவழங்குடி சித்தர் குருபூஜை விழா 

பவழங்குடி சித்தர் குருபூஜை விழா 

திருக்கனுார் : சோம்பட்டு பவழங்குடி சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை விழா வரும் 3ம் தேதி நடக்கிறது. திருக்கனூர் அடுத்த சோம் பட்டு கிராமத்தில் பவழங் குடி சித்தர் ஜீவசமாதி உள் ளது. இங்கு சித்தரின் 217 வது ஆண்டு குரு பூஜை விழா வரும் 3ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, அன்று காலை 8:00 மணிக்கு முதல் கால யாக வேள்வியுடன் கூடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை பவழங்குடி சித்தர் திருத்தொண்டு சபை யினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை