உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும்

பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும்

புதுச்சேரி, : பொதுக் கூட்டம், வாகன பிரசாரம் செய்ய முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;புதுச்சேரியில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் சம்பந்தமாக பொதுக்கூட்டங்கள் நடத்தவும், வாகன பிரசாரம் போன்ற அனைத்து அரசியல் நிகழ்வுகளுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும்.இந்த முன் அனுமதியை பெறsuvidha.eci.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி அனுமதி பெற ஒற்றை சாளர அனுமதி அலுவலகம், சாரம் பழைய கலெக்டர் அலுவலகம், திட்டம் மற்றும் ஆராய்ச்சி தரைதளத்தில் இயங்குகின்றது. இதற்கு வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ