உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நகரில் முக்கிய சாலைகளை ஒரு வழிபாதையாக மாற்ற மனு

 நகரில் முக்கிய சாலைகளை ஒரு வழிபாதையாக மாற்ற மனு

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரும் மக்களின் நலன் கருதி நகரப்பகுதியில் ஒருவழி பாதைகள் அறிவிக்க வேண்டும் என, காவல் துறை இயக்குனருக்கு எல்.ஜே.கே., கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனு அளித்துள்ளார். மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட உலகம் முழுதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள், போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி அவதிப்படாமல் இருக்க, முக்கிய சாலைகள், வீதிகளை தற்காலிக ஒருவழிப் பாதைகளாக மாற்ற வேண்டும். மேலும், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு, முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் ஒருவழிப் பாதைகள் அறிவிக்க வேண்டும். அதேபோல் செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல்களை உடனடியாக இயக்கி, மக்கள் பாதுகாப்புடன் பயணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவல் கூறப்பட்டி ருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி