உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தைப்பூசத்திற்கு விடுமுறை கோரி கவர்னர், முதல்வருக்கு மனு

தைப்பூசத்திற்கு விடுமுறை கோரி கவர்னர், முதல்வருக்கு மனு

புதுச்சேரி, : புதுச்சேரியில் தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்க, கவர்னர் மற்றும் முதல்வருக்கு சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அதன் தலைவர் நாராயணசாமி அளித்த மனு;அணையா ஜோதியை தொடங்கி வைத்து உணவளித்த வள்ளலாரின் புகழ் ஓங்க, தைப்பூச திருநாளை அனைவரும் கொண்டாடும் வகையில், நாளை அரசு விடுமுறை அறவிக்க வேண்டும்.ஆன்மிக எண்ணம் கொண்ட முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பல சிறப்பு விடுமுறைகளை அறிவித்துள்ளனர்.அதேபோல மது, மாமிசத்தை தவிர்த்து மனித நேயம் கொண்டு, பசித்தோர் முகம் பாராதிருக்காதே என்ற கருத்தை வலியுறுத்தும் சிறப்பு மிக்க திருநாளில் புதுச்சேரியில் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ