மீன்பிடி துறைமுகத்தை வேறு இடத்திற்கு மாற்ற மனு
காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகம் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டி பாதிப்பிற்கு உள்ளாகும் கிராம மக்கள் கவர்னருக்கு மனு அனுப்பியுள்ளனர். மனு விபரம்: காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் இடத்தை முல்லை பெரியாற்றில் இருந்து மாற்ற கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கருக்களாச்சேரி கிராம பொதுமக்கள் முல்லையாற்றில் துறைமுக விரிவாக்கத்தை அரசலாற்றில் வைப்பதற்கு அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் சம்பந்தபட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையால் நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் ரூ.130 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை மீன்பிடிதுறைமுகம் விரிவாக்க பணியை துவங்கிட முயற்சித்து வருகின்றனர். கிராமத்தை அழிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் உள்ளது. எனவே திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.