உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருட்கள் குறித்து கலெக்டரிடம் மனு

போதை பொருட்கள் குறித்து கலெக்டரிடம் மனு

புதுச்சேரி: போதை பொருட்களில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.இதுகுறித்து, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் கலெக்டரிடம் கொடுத்த மனுவில்:தமிழக மற்றும் புதுச்சேரி மாணவர் சமுதாயத்தின் இடையே பரவி வரும் போதை பொருட்களை தடுத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல, புதுச்சேரியில், அதிகரித்து வரும் ரெஸ்டோ பார்களை மூடவேண்டும். என கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனர்.அப்போது, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் நிர்வாகிகள், தீபன், பிரகாஷ், வேதாஞ்சலி, கோகிலா, விமலா உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை