மேலும் செய்திகள்
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
4 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
4 hour(s) ago
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் திடீர் நிறுத்தம்
4 hour(s) ago
புதுச்சேரி: பெங்களூருவில் நடைபெற உள்ள தென் மண்டங்களுக்கு இடையிலான இறகு பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யும் பணி நடந்தது. பெங்களூருவில் நாளை மறுநாள் (5ம் தேதி) துவங்கி, வரும் 8ம் தேதி வரை, 80வது தென்மண்டலங்களுக்கு இடையிலான இறகு பந்து போட்டி நடைபெற உள்ளது. அதையொட்டி, புதுச்சேரி வீரர்கள் தேர்வு செய்யும் பணி, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நல இயக்குனரகம் சார்பில், இந்திய இறகுபந்து சங்கத்தின் அனுமதியுடன் நுாறடி சாலை, ராகவேந்திரா நகர் 3வது குறுக்கு தெரு, சுமாஷ் பேட்மிண்டன் கிளப்பில் நேற்று காலை துவங்கியது. இந்த போட்டிக்கு, 19 வயதிற்குட்பட்டோர் மற்றும் சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யபட உள்ளனர். இந்த போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி, இரண்டாவது நாளாக இன்று (3ம் தேதி) நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு 8248743533, 7598500555 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago