உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாகூரில் ரவுடிகள் வீடுகளில் போலீஸ் அதிரடி சோதனை

 பாகூரில் ரவுடிகள் வீடுகளில் போலீஸ் அதிரடி சோதனை

பாகூர்: பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதியில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார், ஆபரேஷன் திரிசூல் என்ற பெயரில் அவ்வப்போது அதிரடி சோரதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாகூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பாகூர் மற்றும் கிருமாம்பாக்கம் பகுதியில், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சஜித் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயக்குமார், நந்தக்குமார், சந்திரசேகர் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். பாகூர், கிருமாம்பாக்கம், சேலியமேடு, பிள்ளையார்குப்பம், சோரியாங்குப்பம் பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் நடத்திய இந்த அதிரடி சோதனையில், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், ரவுடிகளிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூர்களுக்கு சென்றாலோ, மொபைல் போன் எண்களை மாற்றினால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க கூறினர். மேலும், 8 ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ