உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரோட்டரி உறுப்பினர்களுக்கு பயிலரங்கு

ரோட்டரி உறுப்பினர்களுக்கு பயிலரங்கு

புதுச்சேரி : ரோட்டரி சங்க புதிய உறுப்பினர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.நைனார்மண்டபத்தில் உள்ள அன்னை தெரசா மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க ஆலோசகர் கருணாகரன் வரவேற்றார். புதுச்சேரி எலைட் ரோட்டரி சங்கத் தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார்.ரோட்டரி முன்னாள் கவர்னர் ஜோசப் சுரேஷ்குமார், ரோட்டரி கவர்னர்கள் பழனிவேலு, விஸ்வேஸ்வரன், பள்ளி முதல்வர் பால்ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான மாவட்ட தலைவர் சுகுமார் நோக்கவுரையாற்றினார். விழாவில் மண்டல உதவி கவர்னர் சிவராஜ், மாவட்ட கவர்னர் அசோகாவை அறிமுகம் செய்து வைத்தார்.பயிலரங்கை ரோட்டரி மாவட்ட கவர்னர் அசோகா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன், வாசு, பாலச்சந்தர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை