உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலை விளையாட்டில் தேக்வாண்டோ சேர்ப்பு

பல்கலை விளையாட்டில் தேக்வாண்டோ சேர்ப்பு

புதுச்சேரி : பல்கலைக் கழக விளையாட்டில் தேக்வாண்டோ சேர்க்கப்பட்டுள்ளது என, புதுச்சேரி தேக்வாண்டோ விளையாட்டுச் சங்க செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு தேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு பரிசுகளை வென்றுள்ளனர்.கடந்த 2009ம் ஆண்டு முதல் தொழிற் கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங்கில் தேக்வாண்டோ விளையாட்டுக்கு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த உடற்கல்வி இயக்குனர்கள் கூட்டத்தில், தேக்வாண்டோ விளையாட்டைப் பல்கலைக்கழக விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இக்கோரிக்கை, கூட்டத்தின் தலைவர் ஜோதி உள்ளிட்ட அனைவராலும் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதையடுத்து, 1.8.2011 முதல் தேக்வாண்டோ, பல்கலைக்கழக விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது, தேக்வாண்டோ வீரர், வீராங்கனைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ