உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் பாரதி அரசு பள்ளியில் தியாகராஜன் எம்.எல்.ஏ., ஆய்வு

பாகூர் பாரதி அரசு பள்ளியில் தியாகராஜன் எம்.எல்.ஏ., ஆய்வு

பாகூர் : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில் தியாகராஜன் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி கட்டடம், வகுப்பறை, கழிவறை வசதிகளை பார்வையிட்ட தியாகராஜன் எம்.எல்.ஏ., பள்ளி முதல்வர் கோமதியிடம் ஆசிரியர்-மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்தார். பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றி, அவ்விடத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுக் கூடம் கட்ட வேண்டும்.பள்ளியின் பாதுகாப்பு கருதி சுற்றுச் சுவர் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். பழுதான பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடங்களை கட்ட வேண்டும் என எம்.எல்.ஏ.,விடம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ