உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய அளவிலான போட்டியில் பிரசிடென்சி பள்ளி சாதனை

தேசிய அளவிலான போட்டியில் பிரசிடென்சி பள்ளி சாதனை

புதுச்சேரி: தேசிய அளவிலான போட்டியில் பரிசு பெற்று, பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்துள்ளது.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் மத்திய அரசு சார்பில் டில்லியில் நடந்த தேசிய அளவிலான 'கலா உத்சவ்' போட்டிகளில் பங்கேற்றனர்.இதில், பிளஸ் 2 மாணவி லோகேஸ்வரி சிற்பக்கலை பிரிவில் வெள்ளிப் பதக்கம், பிளஸ் 1 மாணவர் பாலாஸ்ரீ நாடகப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.மேலும், டில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கண்காட்சியில் மாணவி லோகேஸ்வரியின் சிற்பக்கலையை பிரதமர் மோடி பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார்.தேசிய அளவிலான நாடகப் போட்டியில் பரிசு பெற்ற புதுச்சேரியில் முதல் பள்ளி என்ற சிறப்பை பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி பெற்றுள்ளது. பரிசு பெற்ற பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், பள்ளி முதல்வர் ஜெயந்திராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ