உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேஷனல் பள்ளிக்கு முதல்வர் விருது

நேஷனல் பள்ளிக்கு முதல்வர் விருது

பாகூர் : புதுச்சேரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலை பள்ளிக்கு, முதல்வர் விருது மற்றும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது.தவளக்குப்பம் நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கடந்த 2022-23ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்விற்கு, அதிக மாணவர்களை அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்த சாதனையை பாராட்டி,குடியரசு தின விழாவில்,கவர்னர் தமிழிசை, நேஷனல் பள்ளி சேர்மன் கிரண்குமாருக்கு, முதல்வர் விருது மற்றும் சுழற்கேடயம் வழங்கி பாராட்டினார்.சேர்மன் கிரண்குமார் கூறுகையில் 'எங்கள் பள்ளி கடந்த 2022-23ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி, பொதுத்தேர்விற்கு அதிக அளவில் மாணவர்களை அனுப்பி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.அதனை பாராட்டும் வகையில், முதல்வரின் விருது மற்றும் சுழற்கேடயம் எங்கள் பள்ளிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், ஒத்துழைப்பு அளித்த பெற்றோர்களுக்கு நன்றி. எங்களது பள்ளியில் கல்வி, ஒழுக்கம் மட்டுமின்றி, விளையாட்டு, படைப்பாற்றல், அறிவாற்றல் என, மாணவர்களிடம் உள்ள பன்முகத் திறமையை, வெளிக்கொண்டு வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்