உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஜனையில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பரிசு

பஜனையில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பரிசு

புதுச்சேரி : திருப்பாவை பஜனையில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் அமைந்துள்ள கண்ணபிரான் நாம சங்கீர்த்தன கைங்கரிய சபா சார்பில் தலைவர் தண்டபாணி தலைமையில், மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பஜனை மற்றும் சுவாமியின் உருவ பட வீதி உலா நடந்து வந்தது.அதன் நிறைவு நிகழ்ச்சியாக, நேற்று முக்கிய வீதிகள் வழியாக பஜனை நடந்தது. இதில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கவுரவ தலைவர் கண்ணன், செயலாளர் சண்முகம், பொருளாளர் ராஜா, உறுப்பினர்கள் மணிகண்டன், சக்திவேல் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை