உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் 81 பேருக்கு பதவி உயர்வு ஆணை

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் 81 பேருக்கு பதவி உயர்வு ஆணை

புதுச்சேரி : ற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணியாற்றும் 81 ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு பணியிடங்கள் காலியாக இருந்தன. இப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து இந்த பணியிடங்கள் நிரந்தர பணியாளர்களை கொண்டு தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மேலாளர், உதவி மேலாளர், கேப்டன், மேற்பார்வையாளர், தலைமை மேசைப்பணியாளர் என, 13 பதவிகளில் மொத்தம் 81 பேர் பதவி உயர்வு மூலம் நிரபப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணியாணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி பணியாணை வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை