உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கல்

பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கல்

புதுச்சேரி: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 237 கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் நலத்துறை, பல்வேறு திட்டங்களின் கீழ் இந்தாண்டு ரூ.3.16 கோடிக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.13 ஆயிரம் (முதல் குழந்தை) மற்றும் ரூ.18 ஆயிரம் (இரண்டாம் குழந்தை) வீதம் மொத்தம் 237 நபர்களுக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வழங்கினார். அப்போது சபாநாயகர் செல்வம், சிவா எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், கண்காணிப்பாளர் வேல்முருகன் லெபாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை