உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்

காலாப்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கல்

புதுச்சேரி : காலாப்பட்டு தொகுதி யில் நலத்திட்ட உதவிகளை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார்.காலாப்பட்டு தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காலப்பட்டு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.விழாவில், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., முதல்வர் நிவாரண நிதி 70 பேருக்கும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் 73 பயனாளிகளுக்கு சிவப்பு ரேஷன் அட்டை, குடிசை மாற்று வாரியம் மூலம் கல்வீடு கட்டும் திட்டத்தில் 28 பயனாளிகளுக்கு முதல் தவணையாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான பணி ஆணை வழங்கினார்.மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் ஏழை மணப்பெண்ணின் திருமண நிதியுதவி 15 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் பெறுவதற்கான ஆணை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல வாரியம் மூலம் சலவைத் தொழிலாளர்கள் 13 பேருக்கு தள்ளு வண்டியுடன் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை