உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது நல அமைப்புகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

பொது நல அமைப்புகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

புதுச்சேரி : சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, எம்.எல்.ஏ., தலைமையில் பொது நல அமைப்புகள் ராஜா தியேட்டர் அருகில் கோஷங்கள எழுப்பி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.புதுச்சேரியில் சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நேற்று இரவு 7:00 மணிக்கு,ராஜா தியேட்டர் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகே, கோஷங்கள் எழுப்பி மெழுகுவர்த்தி ஏற்றி பலர் அஞ்சலி செலுத்தினர்.நேரு எம்.எல்.ஏ., தலைமையில்,மாநில பொது நல அமைப்புகள், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என, அஞ்சலி செலுத்திவர்கள் கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ