உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு உயர்நிலை பள்ளியில் புதிய காலண்டர் வெளியீடு

அரசு உயர்நிலை பள்ளியில் புதிய காலண்டர் வெளியீடு

புதுச்சேரி : எஸ்.ஆர்.எஸ்., அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில், தினசரி காலண்டர் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.சாரத்தில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து 'வாட்ஸ் ஆப் குழு' ஆரம்பித்து, பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான எஸ்.ஆர்.எஸ்., வாட்ஸ் ஆப் குழுவின் சார்பில் தினசரி காலண்டர் பள்ளி வளாகத்தில் வெளியிடப்பட்டது. பள்ளியின் முன்னாள் ஆசிரியர் அண்ணாமலை காலண்டரை வெளியிட, தலைமை ஆசிரியை பிரேமலதா பெற்றுக்கொண்டார்.பள்ளி ஆசிரியர்களுக்கும், எஸ்.ஆர்.எஸ்., வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள முன்னாள் மாணவர்களுக்கும் காலண்டர் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை