உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழம், காய்கறி தள்ளு வண்டிகள் பெற தேர்வானோர் பெயர் பட்டியல் வெளியீடு

பழம், காய்கறி தள்ளு வண்டிகள் பெற தேர்வானோர் பெயர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: பழம் மற்றும் காய்கறி தள்ளு வண்டி பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஆட்சேபனை இருப்பின் வரும் நவ., 3ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை இயக்குனர் சண்முகவேலு செய்திக்குறிப்பு; புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் சார்பில், மகளிர் மற்றும் இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில், பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டிகள் பெறுவதற்கு 50 சதவீத பிந்தைய மானியம் வழங்கப் படுகிறது. இந்த வருடம் 2025ல் பழம் மற்றும் காய்கறி தள்ளு வண்டிகள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் சமுதாய தணிக்கை செய்வதற்காக அக்., 24 முதல் நவ., 3ம் தேதி வரை ஒட்டப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதளத்திலும் (https://agri.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் வரும் நவ., 3ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ