மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி அடுத்த காரைக்கால் பகுதியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு தினசரி ஏராளமான பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்காலில் இருந்து கடந்த 27ம் தேதி இயக்கப்பட்ட பி.ஒய் 01 2517 என்ற பதிவெண் கொண்ட பி.ஆர்.டி.சி.,பஸ்சில் நாகப்பட்டிணம் போக்குவரத்து போலீசார் ஆவணங்களை சரி பார்த்தனர். புதுச்சேரி அரசின் பி.ஆர்.டி.சி., பஸ்சிற்கு எப்.சி., இல்லையென கூறி பறிமுதல் செய்தனர்.அதைதொடர்ந்து, அந்த வழித்தடத்தில் இதுவரை பி.ஆர்.டி.சி., பஸ் இயக்காததால், பயணிகள் பரிதவித்து வருகின்றனர். பி.ஆர்.டி.சி.,யிடம் கூடுதல் பஸ்கள் இல்லை. எனவே மாற்று பஸ் காரைக்கால் - நாகை வழித்தடத்தில் இயக்கப்படவில்லை.இந்த வழித்தடத்தில் தினமும் 15 ஆயிரம் ரூபாய் வரை கலெக் ஷன் செய்யப்படும். இதனால் பி.ஆர்.டி.சி., நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுபற்றி பி.ஆர்.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஆர்.டி.சி., பஸ்சிற்கு கடந்த 27ம் தேதியே எப்.சி., எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த எப்.சி., வாகனங்களுக்கான செயலில் காட்டவில்லை என கூறி, நாகபட்டிணம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாகபட்டிணம் போக்குவரத்து போலீசாருக்கு எப்.சி., ஆவணங்களை அனுப்பியுள்ளோம்.இருப்பினும் பறிமுதலை நீக்க சென்னையில் உள்ள அதிகாரிகளால் மட்டுமே முடியும் என்பதால் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.பறிமுதல் செய்யப்பட்ட பி.ஆர்.டி.சி., பஸ் மீண்டும் நாகை - காரைக்கால் வழித்தடத்தில் வரும் 8 ம் தேதி முதல் இயக்கப்படும்'என்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago