மேலும் செய்திகள்
ரூ.500 கோடி சுருட்டிய தம்பதி உட்பட மூவர் கைது
17 minutes ago
இறுதி ஆசை நிறைவேறும்!
19 minutes ago
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் இளைஞர் கைது
28 minutes ago
புதுச்சேரி : 'புதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது' என, தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குனர் வல்லவன் கூறினார். புதுச்சேரி காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய அலுவலர்களுக்கான கணினி பயிற்சியை புதுச்சேரி மேலாண்மை மற்றும் உற்பத்தித் திறன்குழு நடத்தியது.பயிற்சி முடித்த 65 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, மாவட்ட தொழில் மைய கருத்தரங்க கூடத்தில் நடந்தது.காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய முதன்மை செயல் அதிகாரி தினேஷ் முன்னிலை வகித்தார்.
தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குனர் வல்லவன், பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: தொழில் துறையில் புதுச்சேரி பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்றிருந்தது. இதனால் நிறைய தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தன. 1996க்குப் பின் எதற்காக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பெரிய தொழிற்சாலைகள் இங்கிருந்து வெளியேறின. ஆனாலும் ஆண்டுக்கு 400 புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டுள்ளன. 2010-11ம் ஆண்டில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 82 கோடியாகும். இவற்றில் ஏ.எப்.டி., சுதேசி மில்கள் மற்றும் கதர் வாரிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க 69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை பட்ஜெட்டின் மொத்த நிதியில் 90 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பாரம்பரியமிக்க மில் களை செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 'இன்சென்டிவ்' இல்லையென் றால் ஏன் தொழில் துவங்க வேண்டும் என கேட்கின்றனர். புதுச்சேரியில் விளைநிலங்கள் எல்லாம் தற்போது பிளாட்டுகளாக மாறி வருகின்றன. கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒருமாத காலத்திற்குள் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் தனியார் கம்பெனிகளில்தான் அதிக மக்கள் வேலை செய்கின்றனர். மக்களுக்கு நல்ல முறையில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு வல்லவன் பேசினார்.
17 minutes ago
19 minutes ago
28 minutes ago