உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் தள்ளி வைப்பு

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் தள்ளி வைப்பு

புதுச்சேரி : பி.ஆர்.டி.சி., ஊழியர்களின் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்கிடையில், முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கூட்டுக்குழு தலைமைப் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால் இன்று (28ம் தேதி)நடக்க இருந்த உண்ணாவிரதப்போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி) ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக்குழு பொதுச் செயலாளர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி