| ADDED : ஆக 03, 2011 01:32 AM
காரைக்கால் : காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து மாத்திரைகள் மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து வரும் 5ம் தேதி மா.கம்யூ., வினர் பாடை கட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். காரைக்கால் மா.கம்யூ., வட்டக்குழு கூட்டம் நடந்தது. ராமர் தலைமை தாங்கினார். செயலர் வின்சென்ட், நிர்வாகிகள் கலியபெருமாள், ராஜசேகரன், ரவி, திவ்வியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். சி.டி., ஸ்கேன் பழுதாகி உள்ளது. சிறுநீரகம், நரம்பியல், மயக்கவியல், இருதயப் பிரிவிற்கு டாக்டர்கள் இல்லை. உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து மருந்து மாத்திரைகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டித்து 5ம் தேதி பாடை கட்டி போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.