உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுவை பாரதி மலர் வெளியீடு

புதுவை பாரதி மலர் வெளியீடு

புதுச்சேரி : மூலக்குளம் பாரீஸ் நகரில் பாரதி பல்கலை பேரவை சார்பில் புதுவை பாரதி 27ம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேரவை நிறுவனர் பாரதிவாணர் சிவா தலைமை தாங்கினார். பாவலர் ஆறுமுகம் வரவேற்றார். செந்தில்குமரன், பழனி வாழ்த்தி பேசினர். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., புதுவை பாரதி 27ம் ஆண்டு மலரை வெளியிட்டு, சிறப்புரையயாற்றினார்.நிகழ்ச்சியில் 'சோளக் கொல்லை பொம்மை' குழந்தை பாடல் நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழறிஞர் தங்கப்பா, நல்லாசிரியர் விருது பெற்ற நளினா, அன்பழகன், ராஜவேலு, ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேரவையின் ஓவியப் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த மாணவர்கள் கருணா, அருண்குமார், ரோசினி, திவ்யா ஆகியோருக்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்