| ADDED : ஜன 17, 2024 08:38 AM
புதுச்சேரி : மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், காரைக்கால், புதுச்சேரி வடக்கு அணி, ஏனாம் அணிகள் வெற்றி பெற்றன.கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறது.கடந்த 14ம் தேதி இரவு 7.00 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி மேற்கு அணியும், காரைக்கால் அணியும் மோதின.முதலில் ஆடிய புதுச்சேரி மேற்கு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய காரைக்கால் அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.15ம் தேதி மதியம் 3.00 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி வடக்கு அணியும், மாகி அணியும் மோதின. முதலில் ஆடிய புதுச்சேரி வடக்கு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மாகே அணி 14.4 ஓவர்களில் 70 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி வடக்கு அணி 66 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.15ம் தேதி இரவு 7 மணிக்கு நடந்த காரைக்கால் அணி- ஏனாம் அணிகள் மோதியது. முதலில் ஆடிய ஏனாம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய காரைக்கால் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 163 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. காரைக்கால் வீரர் மணிகண்டன் 43 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.நேற்று மதியம் நடந்த போட்டியில் ஏனாம் அணி- மாகி அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த ஏனாம் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்தது. ஏனாம் அணியின் சிவ சதிஷ் வர்மா அபாரமாக ஆடி 64 பந்துகளில் 108 ரன்கள் அடித்தார்.தொடர்ந்து ஆடிய மாகி அணி 17 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஏனாம் அணி 76 ரன்கள் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. சிவ சதிஷ் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.