மேலும் செய்திகள்
இன்று இனிதாக >> திருப்பூர்
10-Apr-2025
புதுச்சேரி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று மாலை நடக்கிறது.இன்று மாலை 4:20 மணியளவில் ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.விழாவை முன்னிட்டு பிற்பகல் 1:20 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, நவக்கிர ஹோமம் நடக்கிறது. மதியம் 2:30 மணிக்கு சங்கல்பம், மாலை 3:00 மணியளவில் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், தொடர்ந்து கடம் புறப்பாடு, மாலை 4:00 மணிக்கு கலசாபிேஷகம், 4:20 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.சிறப்பு யாகம் மற்றும் பரிகார பூஜையில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோவிலில் 200 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அதிகாரி சரவணன், ஆலய தலைமை அர்ச்சகர் சரவணன் சிவாச்சார்யார் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
10-Apr-2025