உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விரிவுரையாளர் பணியில் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

விரிவுரையாளர் பணியில் இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, எஸ்.சி., பி.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்து, அரசு மறு அறிவிப்பை வெளியிட வேண்டும் என, சமூக நீதிப் பேரவை செயலாளர் கீதநாதன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:புதுச்சேரி கல்வித்துறையில், 67 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், எஸ்.சி., பி.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்து இருக்க வேண்டும். இதில், இந்த இரு பிரிவினரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் .இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. சமூக நீதிக்கு எதிராக அமைந்துள்ளது. இரு பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளித்து, மீண்டும் அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.இது குறித்து பேரவையின் சார்பில், கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகளிடம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சமூக நீதி பேரவை தலைவர் தனராமன் உள்ளிட்டோருடன் சென்று மனு அளித்துள்ளோம். கல்வித்துறை அதிகாரிகளும், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி