மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
9 minutes ago
ரகளை செய்த வாலிபர் கைது
15 minutes ago
புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி துறை சார்பில், 'ஆய்வு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் ஆராய்ச்சி வார விழா' நடந்தது. விழாவில், 2011ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லேமா கோபோவி தலைமை விருந்தினராக பங்கேற்றார். மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லேமா கோபோவி பங்கேற்றது கல்லுாரிக்கே மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்வியில் ஆராய்ச்சி குறைவாக இருந்த நிலையிலிருந்து, தற்போது மாணவர்கள் ஆராய்ச்சியில் முன்னேறி வருவது மகிழ்ச்சிகரமான மாற்றம். தோல்விகள் இருந்தாலும், மாணவர்கள் அதைத் தாண்டி சேவைக்காக ஆராய்ச்சி செய்ய வேண்டும்' என்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். தட்சசீலா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் விவேக் இந்தர் கோச்சர், மருத்துவமனை இயக்குநர் காக்னே, டீன்க் கார்த்திகேயன், சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை கண்காணிப்பாளர் கிரிஜா,துணை டீன் சவுந்தர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒரு வாரம் நடந்த விழாவில் ஆராய்ச்சி கட்டுரை, போஸ்டர் வெளியீடுகள், தலைப்பு சார்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்துறை நிபுணர்களின் சொற்பொழிவுகள் நடந்தன.
9 minutes ago
15 minutes ago