மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி: 'லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது' என, உழவர்கரை மாவட்ட பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுச்சேரி பா.ஜ., உழவர்கரை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஓட்டல் பாண்டி சதர்சன் ரெசிடன்சில் நடந்தது. உழவர்கரை மாவட்ட பா.ஜ., தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில அமைப்பு சாரா பிரிவு தலைவர் சந்துரு வரவேற்றார்.முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன், பா.ஜ., மாநில துணைத் தலைவர்கள் முருகன், அகிலன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன், மாநில செயலாளர் சரவணன், மாநில மகளிரணி தலைவி ஜெயந்தி, உழவர்கரை மாவட்ட பொறுப்பாளர் சரவணகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பா.ஜ., தலைமைக்கு நன்றி தெரிவித்தல், பொங்கல் விழாவின் போது லாஸ்பேட்டை தொகுதி கிருஷ்ணா நகர், அசோக் நகரில் நடந்த கோலப்போட்டிக்கு சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், லாஸ்பேட்டையில் பொங்கல் திருவிழா ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட பொதுச் செயலாளர்கள் பிரகாஷ் (எ) ராஜசேகர், சுரேஷ் கண்ணா ஆகியோர் நன்றி கூறினர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago