உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவமனை முன் சாலை மறியல் 

மருத்துவமனை முன் சாலை மறியல் 

பாகூர் : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண்ணிற்கு, கையில் வீக்கம் ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி மனைவி புட்லாய் 39; மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வயிற்று வலி காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு, கையில் மருந்து ஏற்றிய இடத்தில் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அவரது உறவினர்கள் நேற்றிரவு மருத்துவமனை சென்று விளக்கம் கேட்டு, மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, பா.ஜ., வினருடன் இணைந்து மருத்துவமனை எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிருந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை