மேலும் செய்திகள்
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
8 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
8 hour(s) ago
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் திடீர் நிறுத்தம்
8 hour(s) ago
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சம் எடுத்து சைபர் கும்பல் மோசடியில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதலியார்பேட்டை, தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் பக்தவச்சலம், 64; ஓய்வு பெற்ற தனியார் கம்பெனி ஊழியர். இவரை கடந்த 28 ம் தேதி தொடர்பு கொண்ட மர்மநபர், வங்கி அதிகாரி போல் பேசி, வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் மூலம் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. அந்த சலுகையை பெற தங்களது விவரங்களை தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அதை நம்பிய அவர் தனது வங்கி கணக்கின் அனைத்து விவரங்கள் மற்றும் ஓ.டி.பி.,யை தெரிவித்துள்ளார். அதன்பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பக்தவச்சலம் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago