மேலும் செய்திகள்
3 பெண் உட்பட 6 பேரிடம் ரூ.1.40 லட்சம் மோசடி
03-Jul-2025
புதுச்சேரி : கனடா, ஆஸ்திரேலியாவில் வேலை என கூறி, புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 1.47 லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைனில் கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார்.அதில் இருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய நபர், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதி அளித்துள்ளார். அதற்காக, விசா செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பிய, அப்பெண் 1 லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.இதேபோல், மூலக்குளத்தை சேர்ந்த பெண் 50 ஆயிரம், நல்லவாடு பெண் 42 ஆயிரம், முத்தியால்பேட்டை நபர் 1,845, ரெயின்போ நகரைச் சேர்ந்த நபர் 4 ஆயிரம் என மொத்தம் 5 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்தி 45 ஆயிரத்து 345 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
03-Jul-2025