மேலும் செய்திகள்
தொடர் தோல்வி: பிரியங்கா உடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு?
34 minutes ago
zதுச்சேரி, : மயிலத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஓம்சக்தி நகரில் மனைகளை முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி ஓம்சக்தி ரியல் ஏஜென்சி நிறுவனத்தின் 59வது மனைப்பிரிவு, மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில், செண்டூர் செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, புதுச்சேரி ராஜா சாஸ்திரி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஓம்சக்தி ரியல் ஏஜென்சியின் நிறுவனர் ஓம்சக்தி சேகர், தமிழ்ச்செல்வி, ஓம்சக்தி தமிழ்செங்கோலன், ஓம்சக்தி கவியரசன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு, மனைகளை போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்தனர்.இந்த மனைப்பிரிவின் முக்கிய அம்சமாக இரண்டு பிரமாண்ட நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளும் தரமான தார் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஓம்சக்தி நகரில் உடனடியாக வீடு கட்டி குடியேற மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி உள்ளது.மேலும், நகரை சுற்றிலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.துவக்க நாளிலேயே முன்பதிவு சிறப்பான முறையில் நடந்ததால், இன்னும் சில மனைகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன.வாடிக்கையாளர்கள் தங்களுக்கான மனைகளை முன் பதிவு செய்து கொள்ள ஓம்சக்தி ரியல் ஏஜென்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முதல் நாளில் முன்பதிவு செய்தவர்களுக்கு, 10 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டது.விழாவில் ஓம்சக்தி ரியல் ஏஜென்சி மேலாளர்கள் ஜெகதீசன், சுந்தர் ஆகியோர் வரவேற்றனர். தொழிலதிபர்கள், வணிகர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
34 minutes ago