மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி : வேல்ராம்பட்டு- கொம்பாக்கம் சாலை ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்பு மக்கள் மாற்று இடம் வழங்க கோரி சம்பத் எம்.எல்.ஏ., தலைமையில் முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.வேல்ராம்பட்டு- கொம்பாக்கம் செல்லும் சாலை,வில்லியனுார் செல்வதற்கு மாற்று சாலையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருவதுடன், இந்த சாலையில் இரு பள்ளிகள் மற்றும் கல்லுாரி உள்ளதால் போக்குவரத்து மிகுதியாக காணப்படுகிறது.சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக குறுகிய பாதையாக மாறி, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இச்சாலையை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதால், முதல் கட்டமாக சாலையின் ஒரு புறத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 27 குடும்பங்களுக்கு, அவர்களின் நலன்கருதி மாற்று இடம் வழங்க வேண்டுமென தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தலைமையில் பொதுமக்கள்முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி இன்னும் ஒரு மாதத்திற்குள், ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கு 600 சதுர அடி கொண்ட காலி மனையை 27 குடும்பங்களுக்கும் மாற்று இடமாக வழங்கப்படும் என உறுதி அளித்தார்.இதையடுத்து, 27 குடும்பத்தினரும் இடத்தை காலி செய்ய அனுமதி அளித்துகடிதம் வழங்கினர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago