| ADDED : ஜூலை 01, 2026 06:19 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சிக்கு, குளுனி இல்ல தலைவி அருட்சகோதரி செலின் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ரோசிலி தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் மெர்ச்சி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குளுனி பள்ளியின் முன்னாள் மாணவியும், உழவர்கரை நகராட்சி பொறியாளர் ஹெலன் ஷர்மிளா கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவிகள் பல்வேறு பாடப்பிரிவுகளில் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வெளிப்படுத்தினர். குறிப்பாக தமிழ்துறை சார்பில் பொருளாதார சிந்தனை வெளிப்படுத்தும் படைப்புகள், பிரெஞ்சு துறை மூலம் பிரெஞ்சு கல்வி முறையும், லுாவர் அருங்காட்சியகமும், கணிதம், அறிவியல், பொருளாதாரம், கணினி அறிவியல் துறை சார்பில் பல்வேறு படைப்புகள் இடம்பெற்றன. இதில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கண்காட்சியினை பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.