உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரைனி புளூம்ஸ் கான்செப்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பிரைனி புளூம்ஸ் கான்செப்ட் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி : மதகடிப்பட்டு பிரைனி புளூம்ஸ் கான்செப்ட் மேல்நிலைப் பள்ளியில் (இன்போ பெஸ்ட்) 2024 அறிவியல் கண்காட்சி நடந்தது.அரவிந் கல்விக்குழுமம் தாளாளர் வழக்கறிஞர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணைத் தாளாளர் திவ்யா அருண்குமார் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அறிவியல் இயக்கம் துணைத் தலைவர் ஹேமாவதி, பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி சத்தியவேலு ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு துறை சார்ந்த படைப்புகள் மூலம் தங்களின் பண்முக படைப்பு திறன்களை வெளிப்படுத்தினர். கண்காட்சியை பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். பள்ளி முதல்வர் வீரலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ