| ADDED : டிச 12, 2025 05:25 AM
புதுச்சேரி: ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியன் சொசைட்டி பார் ஸ்டடி ஆப் அனிமல் ரீப்ரொடக் ஷன் (ஐ.எஸ்.எஸ்.ஏ. ஆர்.,) இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'மாறி வரும் உலகில் இனப்பெருக்கம்' என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கம் நேற்று முன்தினம் துவங்கியது. அப்துல் கலாம் கலையரங்கத்தில் நேற்று துவங்கிய கருத்தரங்கில், கல்லுாரியின் புல முதல்வர் முருகவேல் வரவேற்றார். அரசு செயலர் யாசின் முகமது சவுத்ரி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் ஐ.எஸ்.எஸ்.ஏ. ஆர்., அமைப்பின் தலைவர் சிவபிரசாத் பங்கேற்று பேசியதாவது: பயிர் உபரிகள் கால்நடை தீவனத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கால்நடைகளில் செயற்கை கருவூட்டல் முக்கியமானது. காளைகளின் உற்பத்தி குறைவாக இருப்பதால் விந்து உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதால், இனப்பெருக்கத்தில் உள்ள இடைவெளியை நிரப்ப, காளை உற்பத்தியில் கவனம் செலுத்து வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர், 'ஆரோக்கியமான கன்று, ஆரோக்கியமான பால் உற்பத்தி, ஆரோக்கியமான இனப்பெருக்கத்தின் முக்கியத்துவம்' குறித்து பேசினார். கருத்தரங்கில் ஐ.எஸ்.எஸ்.ஏ.ஆர்., அமைப்பின் பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மாணவர்கள் பங்கேற்றனர். டாக்டர் காந்தராஜ் நன்றி கூறினார்.