உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் கழிவு நீர் கலப்பு: அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் கழிவு நீர் கலப்பு: அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி: வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால், பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.புதுச்சேரி நகர பகுதியில் நீர் ஆதாரத்திற்கு வேல்ராம்பட்டு ஏரியும், உழந்தை ஏரியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இந்த ஏரிகளை இணைத்து 2 கி.மீ., தொலைவிற்கு படகு சவாரி துவங்க அரசு திட்டமிட்டுள்ளது.இந்த இரு ஏரிகளிலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழவுநீர் கலந்து கடந்த சில நாட்களாகதண்ணீர் நிறம் மாறி கடும் துர்நாற்றம் வீசுகிறது. வீடு களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நீர் நிலைகளில் கலப்பதை தடுக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வேல்ராம்பட்டு ஏரி, உழந்தை ஏரி கரையோரம் போர்வெல் போட்டு பல்வேறு நகர்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில போர்வெல்களை தவிர்த்து மற்றவை நேரடியாகவே வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கழிவு நீர் கலந்துள்ள சூழ்நிலைகளில் ஏரிகளில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.ரெட்டியார்பாளையம், நெல்லித்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றுவதில் மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால் பெரும் பங்காற்றி வருகிறது. இவ்விரு வாய்க்காலுக்கு வரும் மழை வெள்ளத்தை உழந்தை, முருங்கம்பாக்கம் ஏரிகள் வழியாக அரியாங்குப்பம் ஆற்றுக்கு திருப்பிவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் வழியாகவும் வீட்டு கழிவுகள் ஏரிகளில் புகுந்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளனர்.முதலியார்பேட்டை தொகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து அ.தி.மு.க., போராட்டம் நடத்தவும் ரெடியாகி வருகின்றது.

அ.தி.மு.க., போர்க்கொடி

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ.,பாஸ்கர் கூறுகையில், 'முதலியார்பேட்டை தொகுதியின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்த இரண்டு ஏரிகளில் கரையோரம் தான் போர்வெல்போட்டு குடிநீர் செல்கிறது. போர்வெல் போடப்பட்டுள்ள இடங்களில் வீட்டு கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.எனவே பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ