உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஏனாம் இன்ஸ்பெக்டராக சண்முகசுந்தரம் நியமனம்

 ஏனாம் இன்ஸ்பெக்டராக சண்முகசுந்தரம் நியமனம்

புதுச்சேரி: ஏனாம் இன்ஸ்பெக்டராக, சிக்மா செக்யூரிட்டி பிரிவில் பணியாற்றிய சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டு உள்ளார். புதுச்சேரி, ஏனாம் பிராந்தியம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஆடலரசன் தலைமையிலான போலீசார் கடந்த 14ம் தேதி புதுச்சேரி கோர்ட்டிற்கு வந்துவிட்டு திரும்பி சென்றனர். அப்போது, போலீஸ் வேனில் கள்ளு குடித்தபடி, இன்ஸ்பெக்டர் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஆடலரசன் சஸ் பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், சிக்மா செக்யூரிட்டி பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஏனாம் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி