உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாமினை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் கேட்டுக்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி 2026 நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில், தங்களுடைய பெயர்களை சேர்தல், நீக்கல், மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 மற்றும் 28 மற்றும் வரும் ஜனவரி மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், புதுச்சேரியில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடியில் வேலை நேரங்களில் நடக்கிறது. அங்கு, வாக்குச்சாவடி அதிகாரிகளால் பெயர் சேர்தல், நீக்கல், மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் பெறப்படும். இந்த அறிய வாய்ப்பினை புதுச்சேரி மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை