உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளர் நலத்துறையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

தொழிலாளர் நலத்துறையில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

புதுச்சேரி, : புதுச்சேரியில் நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில், வீமக்கவுண்டன்பாளையத்தில் நேற்று மெகா வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இதில், ரிலையன்ஸ் ஜியோ இன்போ,ரிலையன்ஸ் நிப்பான் லைன் இன்சூரன்ஸ்,பிரசன்னா பெர்ஷியன் குரூப், பிளமேஜ் டெக்னாலஜி,ஸ்ரீராம் பைனான்ஸ், சுப்ரீம் இண்டஸ்ட்ரி,டி.வி.எஸ்., பிளேஸ்மெண்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங், கலை, அறிவியல்,வணிகவியல்,பட்ட மேற்படிப்பு முடித்த, ஆண்கள் பெண்கள் என நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். தனியார் நிறுவனங்கள் நேர்காணலை நடத்தி, தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ