உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புதுச்சேரி : ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆங்கில புத்தாண்டை புதுச்சேரி மக்களும், சுற்றுலா பயணிகளும் உற்சாக மாக வரவேற்றனர். இதனையொட்டி புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா பேராலயம், நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்,வில்லியனுார் புனித லுார்து அன்னை திருத்தலம், தட்டாஞ்சாவடி புனித பாத்திமா உள்ளிட்ட ஆலயங்களில் நள்ளிரவு 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. தட்டாஞ்சாவடி புனித பாத்திமா தேவாலயத்தில் நள்ளிரவு நடந்த திருப்பலியில் முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ்,ஆறுமுகம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ