மத்திய அரசு திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் மாஜி கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு
புதுச்சேரி: தமிழகத்தில் விளம்பர அரசியல் தான் நடப்பதாக முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் முன்னாள் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே வரும் 2026ம் ஆண்டில் பயணிக்கும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சில வழிமுறைகள் உள்ளது. நடைமுறை என்னவோ அதையொட்டி மத்திய அரசு செயலாற்றும். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என கூறும் திருமாவளவன் போன்றோர், ஆணவ கொலைகளை அனுமதித்து கொண்டிருக்கின்றனர். அதற்கான கண்டனத்தை கூறுகிறார்களே தவிர, ஆட்சியின் மீது கடுமையான விமர்சனம் வைக்க தயங்குகின் றனர். ஆணவ கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலிமையாக இவர்கள் சொல்வதில்லை. பாய்ந்து வரும் வி.சி., ஆணவ படுகொலை விவகாரங்களில் பதுங்குகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர். போலீஸ் நிலையத்தில் ஒரு தற்கொலை நடந்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. விளம்பர அரசியல் தான் நடக்கிறது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற மத்திய அரசு திட்டத்தின் காப்பி தான் உங்களுடன் ஸ்டாலின். கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் என்ன செய்தார்கள் என மக்கள் கேள்வி கேட்பதாக தெரிவித்தார்.