உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆச்சார்யா கல்லுாரியில் மாணவர் வரவேற்பு விழா

ஆச்சார்யா கல்லுாரியில் மாணவர் வரவேற்பு விழா

புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் 2026–27 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் குருலிங்கம வரவேற்றார். கல்லுாரி மேலாண் இயக்குனர் அரவிந்தன் தலைமை தாங்கி, புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்றார். கிண்ட்ரில் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடட் இணை இயக்குனர் வித்யாபிரபு சிறப்புரையாற்றினார். அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை தலைவர் சியாமளா கவுரி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில், புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ