உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெருமாள் கோவிலில் சூரிய பிரபை உற்சவம்

பெருமாள் கோவிலில் சூரிய பிரபை உற்சவம்

நெட்டப்பாக்கம், : சொரப்பூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சூரிய பிரபை உற்சவம் வரும் 16ம் தேதி நடக்கிறது.நெட்டப் பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 16ம் தேதி ரத சப்தமி முன்னிட்டு காலை 6 மணிக்கு சூரிய பிரபை சேவை உற்சவம் நடக்கிறது. மாலை 4.00 மணிக்கு சேஷ வாகனம், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. பின் மாலை 6 மணிக்கு சந்திர பிரபை வீதி புறப்பாடு நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்